கரும்பு சாப்பிடுவதால் உடம்பில் நடக்கும் மாற்றங்கள் என்ன? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொங்கல் வந்துவிட்டாலே அனைவருக்கும் முதலாவதாக நினைவில் வருவது கரும்பு தான். சுவையில் இனிப்பாக இருக்கும் கரும்பில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றது.
நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
இந்த கரும்பை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கரும்பின் நன்மைகள்
சோர்வாக இருப்பவர்களுக்கு நல்லதொரு புத்துணர்ச்சியை அளிக்கும் பண்பு கரும்பில் உள்ளது.
கரும்பில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைவாக இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கிறது.
இதில் இருக்கும் பொட்டாசியம் மன அழுத்தத்தினை ஊக்குவிக்கும் ஹார்மோன் சுரப்பினை கட்டுப்படுத்துவதுடன், கரும்பை கடித்து மெல்லும் போது ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராகவும் உள்ளது.
கரும்பு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஃபிளவனோய்டுகள் புற்றுநோய் வராமல் எதிர்த்து போராடுகின்றது.
இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் இருக்கும் சோடியம் சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துகின்றது.
கரும்பில் இருக்கும் எலக்ட்ரோலைட்ஸ் கல்லீரல் ஆற்றலை மேம்படுத்த உதவுகின்றது.
முகத்தில் சுருக்கங்கள், சரும பாதிப்புகள் வருவதை தடுத்து வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகின்றது.
நோய் எதிர்ப்பு சய்தியை அளிக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இதில் அதிகமாகவே இருக்கின்றது.
நாம் உண்ணும் உணவுகளை சீராக செரிக்க வைப்பதுடன், கொழுப்பு சேர்க்கையை தவிர்த்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
கரும்பில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |