விமானநிலையத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட துயரம்: மனித செயல்தானா இது? கொந்தளிக்கும் காட்சி இதோ

viral video Sudha Chandran airport security system
By Manchu Oct 23, 2021 05:50 AM GMT
Report

பிரபல நடிகை சுதா சந்திரனுக்கு விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் நடந்த துயரத்தினை காணொளியாக வெளியிட்டு பிரதமருக்கு கோரிக்கை வைத்ததையடுத்து, மத்திய பாதுகாப்பு படை மன்னிப்பு கேட்டுள்ளது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல் என நடித்து மிகப்பிரபலமாகியவர் தான் நடிகை சுதா சந்திரன். பிரபல பரத நாட்டிய கலைஞரான இவர் 1985ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் தனது காலை இழந்து, பின்பு செயற்கை கால் பொருத்திக்கொண்டு நடிப்பு, நடனம் என அசத்தி வருகின்றார்.

தற்போது விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ள பிரபல நடிகை, மாலை வணக்கம், நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை.

எனது நாடு என்னை நினைத்து பெருமிதம் கொள்ளும் படி நான் வரலாறு படைத்திருக்கிறேன். தொழில் முறை பயணமாக வெளிநாட்டிற்கு செல்வதற்கு விமான நிலையம் செல்கையில், பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது எனது செயற்கைக் காலை வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்துப் பரிசோதிக்கும்படி மத்திய பாதுகாப்புப் படையினரிடம் கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை நீக்கிக் காட்டச் சொல்கின்றனர்.

ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை இப்படி செய்யலாமா? இதுதான் மனித செயலா? நமது தேச பக்தி எண்ணமா? மோடி அவர்களே, மூத்த குடிமக்கள், அவர்கள் மூத்தவர்கள்தான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சுதா சந்திரனின் காணொளி பெரும் வைரலாகியதையடுதது, மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை ட்விட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: "உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே பிராஸ்தடிக்ஸ் பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும்.

உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று குறிப்பிட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். பயணப்படும் எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருக்க ஊழியர்களுக்கு எங்கள் விதிமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US