தங்கத்தாலும் பளிங்குகளாலும் செய்யப்பட்ட பிரம்மாண்டமான ஹோட்டல்! ஒரு நாளைக்கு இவ்வளவா?
சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகிறது.
ஒரு நாளாவது இந்த நாட்டுக்கு போக வேண்டும் என்று எல்லோராலும் விரும்பப்படும் ஒரே நாடு துபாய்.
சற்றுலா பயணிகளால் மிகவும் ஈர்க்கப்படும் என்ற பெருமையை கொண்ட நாடும் இதுவே ஆகும்.
இந்த நாடு புர்ஜ் கலீபாவுக்கு பெயர் போன இடமாகும்.
அந்த வகையில் தற்போது புர்ஜ் கலீபாவுக்கு போட்டியிட கூடிய அளவுக்கு ஒரு அதிஉயர் நட்சத்திர விடுதியாக 'அட்லாண்டிஸ் தி ராயல்' என்ற நட்சத்திர விடுதி திறக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிஸ் தி ராயல்
உலகின் முன்னணி வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு பிரமிக்க வைக்கும் கட்டிடமாக விளங்குகிறது.
நுழைவாயிலில் நுழைந்த பின் அட்லாண்டிஸ் தி ராயல் வியக்க கூடிய அளவுக்கு பிரம்பாண்டமான கண்ணாடி சுவர்களுக்குள் தண்ணீர் கொட்டுவது போன்று செய்துள்ளார்கள்.
இந்த விடுதியின் ஒவ்வொரு பகுதியும் உலகின் உயர்தர தாயாரிப்புகளாகும்.
உலகின் முன்னணி பாடகர்கள் மற்றும் பல கலைஞர்களை கொண்டு சிறந்த நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
தங்கத்தாலும் பளிங்குகளாலும் செய்யப்பட்ட அறைகள்
இந்த விடுதியில் 795 அறைகள், 17 உணவு மற்றும் மதுபான விடுதிகள் மற்றும் 92 நீச்சல் குளங்கள் உள்ளன.
அதில் 'ராயல் மேன்ஷன்' அறை மிகவும் விலை உயர்ந்த அறையாகும்.
அட்லாண்டிஸ் ஹோட்டலின் அறைகள் தங்கத்தாலும் பளிங்குகளாலும் செய்யப்பட்டதாகும்.
சுவர்கள் உண்மையான தங்க வால்பேப்பரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
குளியலறைகள் இத்தாலிய பளிங்குகளால் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் கட்டணம் 1000 டொலர் (ரூ.346,533) முதல் 1 (ரூ.34,653,340) இலட்சம் டொலர் வரை செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.