வாழைப்பழம் திருடி சாப்பிட்ட மாணவர்! இதன் மதிப்பு ஒரு கோடியாம்
விலை உயர்ந்த கலைப் படைப்பில் வைக்கப்பட்ட வாழைப்பழத்தை திருடி சாப்பிட்ட மாணவர் தேவையில்லாத சிக்கலில் சிக்கியுள்ளார்.
ஒரு வாழைப்பழம் ஒரு கோடியா?
பொதுவாக மனிதர்களுக்கு பசி என்று வந்துவிட்டால், எதையாவது சாப்பிட்டு பசியை போக்கிவிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சிலர் கோவில்களில் கொடுக்கப்படும் அன்னதானம், வெளியே கடைகளில் சாப்பிட்டு பசியை போக்குவார்கள்.
ஆனால் சிலர் கூச்சப்படாமல் திருடியும் சாப்பிட்டு இறுதியில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்கள். இங்கும் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சியோலில் நடைபெற்ற கலைப்படைப்பு கண்காட்சியை பார்வையிட வந்த இளைஞர் ஒருவர் வாழைப்பழத்தை திருடி சாப்பிட்டுள்ளார். ஆனால் இதனை சாதாரண வாழைப்பழம் என்று நினைக்க வேண்டாம். ஆம் இந்த கலைப்படைப்பில் விலை ஒரு கோடி ரூபாயாம்.
குறித்த மாணவரிடம் விசாரித்த போது, காலையில் சாப்பிடாமல் வந்துவிட்டதாகவும், பசியை அடக்க முடியவில்லை என்பதால் கலைப்படைப்பில் இருந்த வாழைப் பழத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அந்த தோலை பழம் இருந்த இடத்தில் அப்படியே மாட்டி வைத்துள்ளார். இது அங்கிருப்பவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியது.
இதனை குறித்த மாணவரின் நண்பரே காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
İtalyan sanatçı Maurizio Cattelan'ın "Comadian" adlı duvara bantlı muz çalışması, karnı acıkan bir öğrenci tarafından yenildikten sonra yeniden duvara bantlandı.
— Wannart (@wannartcom) May 1, 2023
Çalışmanın değeri 120.000 USD olarak belirlenmiştir. pic.twitter.com/x5QAsplC9b