மாடியில் காதலியுடன் இருந்த காதலன்! அவதானித்த தாய்: நொடியில் பரிபோன உயிர்
காதலியிடம் பேசுவதை தாயார் பார்த்ததால், மாடியில் இருந்து கீழே குதித்து மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலியின் தாயிடம் சிக்கிய காதலன்
சேலம் மாவட்டம் கொல்லப்பட்டியில் மதிய சட்டக்கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் படித்து வந்தார்.
இவருக்கும் கரூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண்ணுக்கும் இருவரும் கரூரில் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது. நேற்றிரவு சஞ்சய், ஹரிணியுடன் அவாது வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஹரிணியின் தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதைப் பார்த்த சஞ்சய், 50 அடி மாடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.