ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நடந்த ருசிகர சம்பவம்: இதை கவனித்தீர்களா? வேற லெவல் காணொளி
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அந்த நிகழ்ச்சியில் அரங்கேறிய பல சுவாரசியமான நிகழ்வுகளை அவ்வளவாக யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் அங்கு நடந்திருந்த சுவாரசிய சம்பங்கள் என்னென்ன என்பதை தற்போது காணலாம்.
கடந்த 7ம் திகதி 10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக அரியணையில் ஏறியுள்ள நிலையில், அதிலும் ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தருணம் அவரது குடும்பத்தில் அவரது மனைவியும், உதயநிதி ஸ்டாலினும் கண்கலங்கியது பரபரப்பாக பேசப்பட்டது.
குறித்த நிகழ்வு மிகவும் எளிமையான நடைபெற்றாலும், எதிர்கட்சியில் இருந்து ஓபிஎஸ், மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமல்ஹாசன், அழகிரி வீட்டிலிருந்து அவரது மகன் தயாநிதி அழகிரி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க் பெரிதும் பேசப்பட்டு வந்தது. ஆம் அவரது முகக் கவசத்தில் நான் திராவிட இனத்தை சேர்ந்தவன் என் வாசகம் இருந்தது.. மேலும் அவர் அணிந்திருந்த மாஸ்க்கின் நிறம் கருப்பு நிறமாகவும் அவரது உடை வெள்ளை நிறமாகவும் இருந்தது.
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருப்பு கலர் உடையும், வெள்ளை மாஸ்க்கும் அணிந்திருந்தார்.
அதுமட்டுமின்றி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், வெள்ளை உடையும், கருப்பு மாஸ்க்கும் அணிந்திருந்தார்.
அதிலும் ஸ்டாலின் தனது சகோதரரரை கட்டியணைத்து தனது அன்பினை பரிமாறியது வேற லெவல் என்றே கூறலாம்.
இறுதியாக முதல்வர் ஸ்டாலினுடன், எதிர்கட்சி துணை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் மற்றும் ஆளுநர் என அனைவரும் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் பருகியது தற்போது வரையிலும் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகின்றது.
ஒட்டுமொத்தமாக திமுக-விற்கு 10 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த தமிழகத்தை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மேலும் நடைபெற்ற ருசிகர சம்பவம் தமிழக மக்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.