லட்சக்கணக்காண பணத்தை காலால் மிதித்து சேதப்படுத்தும் இலங்கை நபர்! வைரலாகும் வீடியோ
பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இலங்கையில் நபரொருவர் லட்சக்கணக்காண பணத்தை காலில் போட்டு மிதிக்கும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகிவருகின்றது.
பொதுவாகவே அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணம் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது.
அந்தளவுக்கு பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்லுமே தவிர ஒருபோதும் குறையவே குறையாது.
இலங்கை நபர்
ஆனால் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நபர்ரொருவர் செய்த மோசமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறித்த நபர் ஒரு கோடிஸ்வரராக மக்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார்.
இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக தாள் நாணயங்களை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் குறித்த நபருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
கோடிக்கணக்கான பணத்தை தானமாக வழங்க அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது. இதன் பின்னணியில் யார் உள்ளார் என்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |