முடி வளர்ச்சியை அதிகரிக்கும் கறிவேப்பிலை கஞ்சி: இலங்கை முறையில் எப்படி செய்வது?
இலங்கையில் பொதுவாக இலைக்கஞ்சி செய்து காலை உணவாக குடிப்பதை மக்கள் வழக்கப்படுத்தி உள்ளனர். மற்றைய கீரைகள் இலைகள் இல்லாவிட்டாலும் கறிவேப்பிலையை வைத்து கூட இலைக்கஞ்சி செய்யலாம்.
கறிவேப்பிலை இலகுவாக கிடைக்கக்கூடிய ஒரு இலை ஆகும்.இந்த இலையில் அதிகப்படியான சத்துக்கள் காணப்படுகின்றது. இதை வைத்து எப்படி கஞ்சி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கப் வெள்ளை அரிசி
- கறிவெப்பிலை
- வெந்தயம் 1 டீஸ்பூன்
- மிளகு 2 டீஸ்பூன்
- தேங்காய் பால்
செய்யுமுறை
முதலில் அரிசியை கழுவி அதை அடுப்பில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இதனுடன் மிளகு, வெந்தயம் சேர்த்து வேக வைத்துக்கொள்ளலாம். பின்னர் கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாற்றை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது வேக வைத்த அரிசி நன்றாக வெந்து கஞ்சி பருவத்திற்கு வந்ததும் இந்த கறிவேப்பிலை சாற்றை ஊற்றலாம்.
பின்னர் இதில் தேங்காய் பால் பிளிந்து விட்டு இரண்டு கொதி வந்ததும் உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான கறிவேப்பிலை கஞ்சி தயார். இதை கொலஸ்ரால் உள்ளவர்கள் தினமும் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
