மிஸ் யுனிவர்ஸ் வெற்றிபெற்ற ஆட்லைன் காஸ்டிலினோவை.. தத்ரூபமாக வடிமைத்த இலங்கை சேர்ந்த நபர்!
இந்த ஆண்டில் அமெரிக்காவில் நடைப்பெற்ற 69-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 3 வது ரன்னர்-அப் ஆக அட்லைன் இடம் பெற்றா
2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா பட்டத்தை வென்றதிலிருந்து இது மிஸ் யுனிவர்ஸில் இந்தியாவின் மிக உயர்ந்த இடமாகும்.
மேலும், சர்வதேச போட்டிகளில் முதல் 5 இடங்களில் இந்தியாவின் 20 ஆண்டுகால வறட்சியை காஸ்டெலினோ முறியடித்தார். 2001 ஆம் ஆண்டில், செலினா ஜெட்லி 4 வது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில், ஆட்லைன் காஸ்டிலினோ(adline-castelino)-வை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்ரீ லங்காவை சேர்ந்த நபர் ஒருவர் தத்ரூபமாக அவரைபோன்றே பொம்மை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
நிகி டால்ஸ்(NIGYDOLLS) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஸ்டிலினோவின் பொம்மை பதிவேற்றி பாராட்டு பெற்றுள்ளர். அவர் செய்த அந்த பொம்மையில் பக்கா பாரம்பரிய சேலையில், நகைகளை அணிந்த படி பொம்மையை வடிவமைத்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து வாழ்த்திய அவர், ஆடை ஒரு பெண்ணின் உண்மை உள்ளடக்கியது. சேலை என்பது ஒரு பாரம்பரிய உடையாகும். இது முழு நாட்டையும் இணைக்கிறது. இந்தயாவின் தேசிய மலரால் இணைக்கப்பட்ட அழகான வண்ணம். என காஸ்டிலினோவை வாழ்த்தியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.