இலங்கையில் வாழும் ஒரு நபருக்கு மாதம் எவ்வளவு ரூபாய் செலவாகும் தெரியுமா? வெளியான விபரம்
உலகம் முழுவதும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் பலரும் அன்றாட வேலையினை இழந்து வருகின்றனர். மேலும் தங்களது குடும்பத்தினை சமாளிப்பதற்கு போதுமான வருமானம் இல்லாமலும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் ஒரு நபர் வாழ்வதற்கு குறைந்தபட்சம் மாதம் எவ்வளவு தேவைப்படும் என்பதை அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு மாதம் 5353 ரூபாய் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு குறைந்தபட்ச செலவாக மாதத்திற்கு 21,500 சம்பாதித்தால், வறுமையில் சிக்காமல் குடும்பத்தினை கொண்டு செல்ல முடியும்.
2021ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் மாதாந்த குறைந்தபட்ச தனிநபர் செலவு ரூபா 5,810 ஆகும்.
மிகக் குறைந்தளவு வாழ்க்கைச் செலவைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது. அங்கு மாதாந்த குறைந்தபட்ச செலவு 5,040 ரூபாயாகும்.