$1 பில்லியன் வருவாய்! உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தமிழர்
சாதனை தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Zoho Corporationன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporationன் நிறுவனர். 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் படிப்பை ஸ்ரீதர் வேம்பு முடித்தார்.
பின்னர், 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் [Qualcomm ] சேர்ந்தார். அங்கிருந்த போது . குறிப்பாக, CDMA, power control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார்.
Zoho
கடந்த 1996ல் நெட்ஒர்க் மேனேஜ்மெண்ட் துறையில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து சென்னையில் சிறிய அபார்ட்மெண்டில் Vembu Software நிறுவனத்தை ஸ்ரீதர் துவங்கி தொழிலில் முழுவதுமாக கவனம் செலுத்தி கடுமையாக உழைத்தார்.
1 பில்லியன் டொலர் வருவாய்
பின்னாளில் தான் இந்த நிறுவனத்தின் பெயர் Zoho Corporation-ஆக மாறியது. 2000 ஆண்டு வாக்கில் இந்தியாவில் 115 பொறியாளர்கள், அமெரிக்காவில் 7 பொறியாளர்கள் என வளர்ந்தது நிறுவனம். மேலும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், வருடத்திற்கு 1 பில்லியன் டொலர் வருவாய் அளவினை எட்டியுள்ளது.
wikipedia
இதன்மூலம் இந்தியாவின் முதல் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை Zoho பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களான ஸ்ட்ரைப், ட்விட்டர், பேஸ்புக், லிஃப்ட், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
ஆனால் இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho அடுத்த ஒரு வருடத்தில் 1,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் சேவை
ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், இந்தியாவில் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனத்தை யாரும் இதுவரையில் உருவாக்கியதில்லை.
2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் உலக நிதி வளர்ச்சி குறைந்திருந்தாலும் எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு போர்ட்போலியோ மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் நாங்கள் சேவை வழங்கியது நிறுவனத்துக்கு லாபம் பெற உதவியது.
தரமான சாஃப்ட்வேர்களை மலிவு விலையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கினோம்; வரும் காலங்களிலும் வழங்குவோம் என கூறியுள்ளார்.
P Ravikumar For Forbes India