நடிகை சினேகா வீட்டு விசேஷத்துக்கு நேரில் சென்ற ரம்பா! புடவையில் ஜொலித்த விஜயகுமாரின் மகள்
நடிகை சினேகா மற்றும் அவரது குடும்பத்தினரை ரம்பா தனது குழந்தைகளுடன் சந்தித்து உள்ளார்.
வரலட்சுமி விரதத்தை அடுத்து நடிகை சினேகா தனது வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த நிலையில் ரம்பா இந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் ரம்பா பதிவு செய்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சினேகாவின் வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
மேலும் இந்த பூஜை குறித்த புகைப்படங்களை சினேகாவும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, அன்றைய தினம் நடிகை ரம்பா நட்பு நிமித்தம் ஸ்ரீதேவி விஜயகுமாரையும் சந்தித்துள்ளார்.