நடிகை ஸ்ரீதேவி இறப்பிற்கு காரணம் இந்த விஷமா? 7 வருடமாகியும் நீங்காத மர்மம்
நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்து இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்த கேள்வி தற்போதும் அனைவருக்கும் எழுந்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்ததுடன் நம்பர் 1 இடத்திலும் இருந்தார். இவர் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி குடும்பத்துடன் துபாயில் கல்யாணம் ஒன்றிக்கு சென்றிருந்தார்.
அப்பொழுது குளியலறை டப்பில் வழுக்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். இவரது பிரேத பரிசோதனை அறிக்கையும் வலுக்கி விழுந்ததுதான் காரணம் என்று கூறியுள்ளது.
ஆனால் இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் தற்போதுவரை அடங்காமல் தான் இருந்து வருகின்றது. இவர் இறந்து இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இதுகுறித்த பேச்சுகளும் எழுந்து வருகின்றது.
விஷம் வைத்து கொல்லப்பட்டாரா?
நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்ற பொழுது அவரது கணவர் போனிகபூர் இந்தியாவில் இருந்ததாகவும், பின்பு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தொழிலதிபர் தீப்தி கூறியுள்ளார். அதாவது மாமுஷி விஷம் வைத்து கொல்லப்பட்டடதாக கூறியுள்ளார். இந்த மாமுஷி விஷம் என்பது பாம்பின் விஷமாகும்.
அதாவது துபாய் செல்வதற்கு 5 நாட்களுக்கு முன்பே அந்த விஷத்தை ஸ்ரீதேவி உடம்பில் செலுத்திவிட்டார்கள். அது உடலில் உறுப்புகளை பாதித்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனையில் கூட அவரது உண்மையை மறைத்துவிட்டதாகவும், அந்த விஷம் எங்கிருந்து எப்படி வந்தது என்பது தனது தெரியும், தேவை என்றால் அதனை கூறுவேன் என்று கூறியுள்ளார்.
13 வயதில் சினிமாவிற்கு வந்த நடிகை ஸ்ரீதேவி பல விருதுகளைப் பெற்று, தனது அருமையான நடிப்பு, அழகான முகம், எளிமையான குணத்தினால் அனைவரது மனதையும் கவர்ந்தாலும், அவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |