ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது மீன் குழம்பு வைப்பது நம்மில் பலரின் வழக்கமாக உள்ளது. பொதுவாக குழம்பு செய்ய அதிகமாக மக்கள் விரும்பும் மீன் என்றால் அது மத்தி மீன் தான்.
மத்தி மீன் சுவை மிகுந்தது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான முறையில் சமைப்பார்கள்.
இந்த பதிவில், இலங்கையில் பாரம்பரியமாக செய்யப்படும் முறையில் மத்தி மீன் குழம்பு எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மஞ்சள் உப்பு 1 டீஸ்பூன்
- வெங்காயம் 01
- பூண்டு 20 பல்
- கறிவேப்பிலை
- ரம்பை
- இஞ்சி துண்டு
- பச்ச மிளகாய்
- கடுகு 1 டீஸ்பூன்
- பட்டை
- வெந்தயம் 1 டீஸ்பூன்
- சீரகம் 1 டீஸ்பூன்
- மிளகாய் பொடி 3 டீஸ்பூன்
- மசாலா பொடி 2 டீஸ்பூன்
- தண்ணீர் 3 கப்
செய்யும் முறை
முதலில் மத்தி மீனை நன்றாக கழுவி அதை உப்பு மஞ்சள் போட்டு கலந்து வைக்க வேண்டும். இதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் வெந்தயம் கடுகு சீரகம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் அதில் ரம்பையும் கறிவேப்பிலையும் சேர்க்க வேண்டும்.

பின்னர் அதில் இறுதியாக இஞ்சியையும் பூண்டையும் இடித்து சேர்க்க வேண்டும். இந்த எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதில் மிகளாய் பொடி மற்றும் மசாலா பொடியை சேர்க்க வேண்டும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு கழுவி வைத்துள்ள மீனை சேர்க்க சேர்க்க வேண்டும். மீன் சேர்த்ததன் பின்னர் கரண்டி போடுவதை தவிர்க்கவும்.
கரண்டி போடுவதால் மீன் உடையும். இதை ஒரு 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சொர்க்கம் தான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |