இலங்கை ஸ்டைலில் சூப்பரான ரெசிபி.. வீடே கம கமக்கும் நெத்தலி கருவாடு தொக்கு
பொதுவாக நெத்திலி மற்றும் கருவாடை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
சமைக்கும் போது அதிலிருந்து வரும் வாசனையில் வீட்டிலுள்ளவர்கள் எந்த பக்கத்தில் இருந்தாலும் பசியை தூண்டும்.
இந்த தொக்கை சப்பாத்தி, தோசை மற்றும் சூடான சாதம் ஆகிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
அந்த வகையில், காலையுணவிற்கு நெத்தலியையும் கருவாட்டையும் பயன்படுத்தி செய்யப்படும் நெத்தலி கருவாடு தொக்கு இலங்கையர்கள் செய்வது போன்று எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெத்திலி கருவாடு - 100 கிராம்
- தக்காளி - 4
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- பூண்டு - 10 பல்
- பச்சை மிளகாய் - 2
- தட்டிய இஞ்சி பூண்டு - 2 மேசைக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
- கறிவேப்பில்லை - சிறிதளவு
- கடுகு - அரை மேசைக்கரண்டி
- நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
எப்படி செய்றாங்க தெரியுமா?
முதலில் தொக்கிற்கு தேவையான நெத்தலி கருவாட்டை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.
இதன் பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு என்பவற்றை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்க விட வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பேஸ்ட் கலந்து, பச்சை வாசனை போகும் வரை வதங்க விடவும்.
வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அதனுடன், கருவாடை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை போட்டு இறக்கினால் சுவையான நெத்தலி கருவாட்டு தொக்கு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |