இயற்கை அழகும் பாரம்பரியமும் நிறைந்த இலங்கையின் சிகிரியா! இங்கு என்வெல்லாம் அதிசயம் இருக்கு தெரியுமா?
மனதிற்கு இதமாக சுற்றுலா செல்வது வழக்கம். அப்படி செல்லும் சுற்றுலா இடங்கள் இயற்கை அழகு நிறைந்ததாக காணப்படுவது அவசியம். அந்த வகையில் தான் இலங்கையில் இருக்கும் சிகிரியா பற்றி பார்க்க போகிறோம்.
சிகிரியா
சிகிரியா மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் 1144 அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரங்கள் பல உள்ளன.
இந்த இடம் முதலாம் காசியப்ப மன்னனால் கட்டப்பட்டதாகும். இதன் பின்னர் இதை இவன் தலைநகரமாக பயன்படுத்தினான். இது உலகின் எட்டாவது அதிசயமாகும். இது சுற்றுலாப்பயணமாக மாற்றப்பட்டதில் இருந்து இங்கு லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு இருக்கும் ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இயற்கையாக மரங்களில் இருந்தும் இலைகளில் இருந்தும் கிடைக்கக்கூடிய வண்ணச்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இது கிபி 650 முதல் 477 வரை 495 அடி கிரானைட் மோனோலிதிக் கல் பாறை கோட்டை மற்றும் அரச கோட்டையின் மையமாக இருந்தது. இந்த இடத்திற்கு உள் நுழையும் போது பல அழகிய குழங்களை தாண்டி ஒரு அமைதியான இடத்தில் நுழையலாம்.
இங்கு குடும்பமாகவும் தனியாகவும் தம்பதிகளாகவும் சென்று பார்வையிட்டு வரலாம். இங்கு பார்வையிடும் போது மனதிற்கு மிகவும் ஆச்சரியத்தை தரும் காட்சிகள் காணப்படும். இந்த இடத்திற்கு செல்வதற்கு மிகவும் குறைந்த செலவே காணப்படும்.
இந்த இடத்தில் விலங்குகளும் காணப்படுகின்றன. நீங்கள் விலங்குப்பிரியராக இருந்தால் இந்த இடம் உங்களுக்கு ஒரு மன நிறைவை தரும். இங்கு போகும் போது நமது உணவை நாமே எடுத்து செல்ல வேண்டும்.
இந்த இடத்தை பார்த்தவுடன் நாம் திரும்பி விடலாம். மேலும் இங்கு உள் நுழைய டிக்கட்டுக்களை எடுத்துச்செல்ல வேண்டும். இது இலங்கை மதிப்பில் ஒவ்வொன்றும் 100 ரூபாய்க்கு மேற்பட்டதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |