வீட்டில் வாழைப்பூ இருக்கா? அப்போ இலங்கை முறையில் இந்த சம்பலை செய்ங்க
வாழைப்பூ நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உணவாகும். வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும். இதை அப்படியே சமைப்பது கடினமான ஒரு விடயம்.
இதை சமைக்க முதலில் சிறந்த முறையில் சுத்தம் செய்து எடுக்க வேண்டும்.அந்த வகையில் இதை இலங்கை முறையில் எப்படி சமைக்கின்றனர் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
செய்யும் முறை
முதலில் வாழைப்பூவை சிறுசிறுதாக வெட்டி தண்ணீரில் உப்பு போட வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பட்டை, பூண்டு, வெங்காயம், ரம்பை போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இவை அனைத்தும் மிகவும் சிறிதாக வெட்டப்பட்டிருப்பது அவசியம். பின்னர் தண்ணீரில் போட்ட வாழைப்பூவை வடிகட்டி சேர்க்க வேண்டும். அதில் மசாலாப்பொருட்களும், உப்பும் சேர்த்தும் நன்றாக வதக்கி விட வேண் வேண்டும்.
பின்னர் இதை அடப்பை விட்டு இறக்கி பரிமாறினால் சுவையான வாழைப்பூ சம்பல் தயார். இதை இப்படியும் சாப்பிடலாம் அல்லது அவித்தோ, பொரியல் செய்தோ, பருப்பு போட்டு கூட்டு செய்தோ சாப்பிடலாம். வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் சாப்பிடும் ஒரு சிறந்த உணவு தான் இது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |