இலங்கையில் வீணாகப்போனதா 312 மில்லியன் ரூபாய்? வேதனைப்படும் மக்கள்
இலங்கையின் கொழும்பில் உள்ள Pettah-வில் உள்ள Bastian Mawatha அமைந்துள்ள மிதக்கும் சந்தையின் தற்போதைய நிலையைக் குறித்தே காணப்போகிறோம்.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவினால் இந்த மிதக்கும் சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு 92 வர்த்தக கடைகள் இருப்பதுடன், பல ஸ்டால்கள் பெய்ரா ஏரியில் படகுகளில் நிறுவப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 312 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடம் தற்போது களையிழந்து காணப்படுகின்றது.
இங்கு அமைக்கப்பட்ட பெரும்பாலான கடைகள் உபயோகப்படுத்தாமல் இருக்கின்றது. மேலும் இங்கு சற்று விலை அதிகமாகவே இருப்பதால் பொதுமக்கள் எந்த பொருட்களையும் அவ்வளவாக வாங்குவதில்லை.
தாய்லாந்து மிதக்கும் சந்தையை விட அழகாக இருக்கும் இந்த சந்தையில் நல்ல உணவகம் கூட இல்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 312 மில்லியன் செலவு செய்து பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டாலும், இதனை சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிதக்கும் சந்தையை அவதானிக்கும் மக்கள் 312 மில்லியன் வீணாகிவிட்டதா? என்ற கேள்வி ஒவ்வொரு மனதிற்குள் எழுந்து வருகின்றது. கீழே காணொளியில் விரிவான தகவலை காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |