வீட்டில் வெண்டைக்காய் இருக்கா? இலங்கை பாரம்பரியத்தில் கார பொரியல் செய்ங்க
நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் அசைவம் என்றாலே அதில் வெண்டக்காய் கறி கட்டாயம் இருக்க வேண்டும்.
வெண்டைக்காயை வைத்து பல வகையான கறி பொரியல் மோர்க்குழம்பு போன்றவை செய்யலாம். ஆனால் வெண்டக்காயை வைத்து இலங்கை பாரம்பரியத்தில் எப்படி கார கறி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய்
- மஞ்சள்
- உப்பு
- வெங்காயம்
- பூண்டு
- பச்ச மிளகாய்
- எண்ணெய்
- கடுகு
- வெந்தயம்
- கறிவேப்பிலை
- வரமிளகாய் பொடி
- தக்காளி
செய்முறை
முதலில் பிஞ்சு வெண்டக்காயை எடுத்து அதை சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள், போட்டு பிசைந்து வைக்க வேண்டும்.
பின்னர் இன்னுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம், பூண்டு, வதக்கிய பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் வரமிளகாய் பொடி, பச்ச மிளகாய், தக்காளி, போட்டு வதக்க வேண்டும். இது நன்றாக வதங்கியதும் எடுத்து வைத்துள்ள வெண்டக்காயை சேர்த்து பின்னர் மாசிபொடி சேர்த்து எப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
மேலும் 5 நிமிடங்கள் வெண்டக்காயை நன்றாக வதக்க வேண்டும். அவ்வளவு தான் ஐந்து நிமிடத்தில் மணக்க மணக்க இலங்கை முறையில் செய்யும் வெண்டக்காய் பொரியல் தயார்.
வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன.
மேலும் இதை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
