ஐபிஎல் ஏலத்தில் தனியொரு சிங்கப்பெண்! அனைவரது கவனத்தை ஈர்த்துள்ள அந்த பெண் யார் தெரியுமா?
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று கொச்சியில் வைத்து நடைபெற்றது.
அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக காவ்யா மாறன் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை தனியொரு சிங்கப்பெண்ணாக காவ்யா மாறன் மட்டும் களமிறங்கியிருக்கிறார்.
ஐபிஎல் ஏலம்
அவருக்கு துணையாக சன்ரைசர்ஸ் அணியில் பிரைன் லாராவும் இடம் பெற்றிருந்தார்.
இதில், முதலாவதாக இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை 13. 25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
காவ்யா மாறன்
இந்நிலையில் காவ்யா மாறன் மாயங்க் அகர்வால், ஆதில் ரஷீத், ஹென்றிச் கிளாசன், விவராந்த் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்களையும் ஏலத்தில் போட்டி போட்டு கவனம் ஈர்த்துள்ளார் .
மேலும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த அணி சூப்பரான விளையாடும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.