Viral Video: பாம்பைக் கொன்ற அணில்... எதற்காக இந்த ஆக்ரோஷம் தெரியுமா?
அணில் ஒன்று தனது குட்டியைக் காப்பாக்கா பாம்பை பழிதீர்த்த காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக தாய்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் உள்ளது. இதனை நாம் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு அணில் ஒன்றின் குட்டியை பாம்பு தனது பிடியில் வைத்திருக்கின்றது. உடனே தாய் அணில் தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
பாம்பை சுற்றி சுற்றி கடித்து தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளது. பாம்பும் பதிலுக்கு குறித்த அணிலை தாக்கும் நிலையில், ஆனால் அணில் தனது போராட்டத்தினை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
Viral Video: தண்ணீரில் உயிருக்கு தத்தளித்த நாய்... காப்பாற்றிய இளைஞர்களுக்கு நன்றி கூறியதைப் பாருங்க
கடைசியில் ஒருவழியாக பாம்பை கொன்றுவிட்டு தனது பிள்ளையைக் காப்பாற்றி எஸ்கேப் ஆகியுள்ளது. பிள்ளை என்று வந்துவிட்டால் பாம்பையே கொலை செய்யும் அளவிற்கு அணிலுக்கு ஆக்ரோஷம் வந்துள்ளது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
A mother never gives up on her children, no matter the odds. This squirrel proves this as she saved her baby from a snake: pic.twitter.com/WEnPOZPnDR
— BrainXpansion (@BrainXpansion) October 6, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |