இந்த கனவுகள் அடிக்கடி வருதா?அப்போ அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்!
தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் என்றாலும் அறிவியல் ஒரு கட்டத்துக்கு மேல் துள்ளியமான கணிக்க முடியாத விடயங்களின் பட்டியலில் கனவுகளும் ஒன்று.
நாம் கனவில் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. மதறாக அதற்கான பலன்களே நிஜத்தில் நடக்கும் என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவுகள் ஆழ்மன எண்ணங்களையும், ஆசைகளையும் பிரதிபலிப்பதுடன், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நன்மைகளையும், தீமைகளுயும் முன்கூட்டியே உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணி என குறிப்பிடுடப்படுகின்றது.
அந்தவகையில் எப்படிப்பட்ட கனவுகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்டுகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் தரும் கனவுகள்
கனவில் அடிக்கடி ஜோதிடர் வந்தாலோ, குரு கனவில் வந்தாலோ உங்களை யாரோ ஒருவர் சரியான பாதையில் வழிநடத்துகிறார் என்தையே அது குறிக்கின்றது.
இவ்வாறான கனவுகள் அடிக்கடி வருகின்றது என்றால் இது மங்களகரமானதாகவும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது. இது வாழ்வில் நீங்கள் விரைவில் முன்னனேற்றத்தை சந்திப்பதன் அறிகுறியாகும்.
குறிப்பாக ஒருவர் தனது ஆன்மீக குருவை கனவில் கண்டால், அந்த நபர் எதிர்காலத்தில் ஆன்மீக பாதையில் செல்வதற்கும் இறைவனுடன் நெருங்கிய தொடர்ப்பை ஏற்படுத்திக்கொள்வதறகும் அதிக வாய்ப்பு காணப்டுவதாக குறிப்பிடப்டுகின்றது.
வெள்ளை நிற பாம்பு, யானை, ஆந்தை, குதிரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கனவில் கண்டால் வாழ்வில் நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவுக்கு நிதி நிலை உயரும்.
ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் கூடி வந்தால் தான் இவ்வாறான உயிரினங்கள் கனவில் வரும். இது சாஸ்திரங்களின் பிரகாரம் செல்வ செழிப்பின் அடையாளமான பார்க்கப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
