கனவில் பாம்புகள் வந்தால் இத்தனை அதிர்ஷ்டங்களா? தங்க பாம்பின் மகிமை
பொதுவாக நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, கனவில் பாம்புகள் வந்தாலும் பயப்படுபவர்கள் நம்மிள் பலர் இருக்கிறார்கள்.
சாஸ்த்திரங்களின் படி கனவில் பாம்பு வந்தால் நம் எதிர்காலத்தைப் பற்றி பல விஷயங்களை அறியலாம் என கூறப்படுகின்றது.
அதிலும் கனவில் காணும் பாம்புகள் என்ன மாதிரியான அறிவுறுத்தல்களை கொடுக்கிறது என்பதனை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். ஏனெனின் இவை தீமைகளையும் நமக்கு உணர்த்தும்.
அந்த வகையில் கனவில் பாம்பு வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாம்பு கனவில் வந்தால் அதிர்ஷ்டமா?
1. கனவில் உங்களுடைய தலையில் பாம்பு இருப்பது போன்று உணர்த்தினால் நீங்கள் உங்களின் எதிர்காலத்தில் கீர்த்தி, மரியாதை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம். அத்துடன் பாம்பு உங்களை விழுங்கினால் நீங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
2. கனவில் பாம்பு உங்களை வேட்டையாடி கடிப்பது போன்று கனவு வந்தால் நீங்கள் வெற்றிக்கு அருகில் வந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களின் எதிரிகளை வீழ்த்த காலம் வந்து விட்டது.
3. நிஜ வாழ்க்கையில் வெள்ளைப் பாம்புகளைக் காண்பது அரிதான விடயம். ஆனால் சிலரின் கனவில் வெள்ளை நிற பாம்புகளை காண்பார்கள். இப்படி கண்டால் உங்களுக்குப் பணவரவு கிடைக்கும். மற்றும் உங்களுக்கு நடக்கும் விடயங்கள் அனைத்தும் நன்மைக்கே நடக்கும்.
4. கனவில் பாம்பு தன் மேல் தோலைக் கழற்றுவது போன்று வந்தால் நீங்கள் சொத்து லாபம் பெறுவீர்கள் என்று அர்த்தம்.
5. தங்க நிறத்திலோ அல்லது வெள்ளையாகவோ இருக்கும் பாம்பு கனவில் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள் என்று அர்த்தம். உங்கள் முன்னோர்களின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |