சத்தான கீரை பிரியாணி: எப்படி செய்யணும்னு தெரியுமா?
பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு வாயில் எச்சில் ஊறும். நாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, காளான் பிரியாணி என பலவித பிரியாணிகளை சாப்பிட்டிருப்போம்.
ஆனால், சுவையுடன் சத்தும் நிறைந்த கீரை பிரியாணி சாப்பிட்டதுண்டா? அது என்ன கீரை பிரியாணி? இது நன்றாக இருக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். அதை செய்து சாப்பிட்டுபார்த்தே தெரிந்து கொள்வோமே...
அருமையான கீரை பிரியாணி ரெடி.
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை - 1 கப்
பாசுமதி அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
இஞ்சி, வெள்ளைப் பூண்டு - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் அரிசியை கழுவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பின்பு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதன் பின்னர் இஞ்சி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் உருளைக்கிழங்கு, வெந்தயக்கீரை. சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இறுதியாக அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். சத்தான கீரை பிரியாணி ரெடி.