ஸ்பெஷல் கிளாஸ் என்று நிறுத்திய ஆசிரியர்: துடிதுடித்து போன மாணவி! பின்பு நடந்தது என்ன?
பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்வாராவில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்வாராவில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியின் மீது தவறான பார்வை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியிடம் பாடம் சம்பந்தமாக பேசுவதாக தொட்டு தொட்டு பேசியுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு விகாஸ் குமார் பாடம் நடத்திய நிலையில், வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பிய போது, மாணவியை மட்டும் இருந்து ஸ்பெஷல் கிளாஸ் அட்டென்ட் செய்துவிட்டு போகுமாறு கூறியுள்ளார்.
ஆசிரியரின் பேச்சை நம்பி அந்த மாணவியும் வகுப்பறையில் தனியாக இருந்த தருணத்தில் மாணவியிடம் ஆபாச படங்களை காண்பித்து தவறாக நடந்துள்ளார்.
பின்பு மாணவி அவரை தள்ளிவிட்டுவிட்டு வீட்டிற்கு அழுதுகொண்டு ஓடியுள்ளார். அங்கு பெற்றோரிடம் நடந்த உண்மையை கூறியதால், உறவினர்களுடன் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
குறித்த ஆசிரியரை அடித்து துவைத்தது மட்டுமின்றி, முகத்தில் பேனா மையை ஊற்றி அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது ஆசிரியரைக் கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்ததுடன், விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.