நடிகையாக மாற ஆசைப்பட்டு இளம் பெண் எடுத்த முடிவு! 15 அறுவை சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கிறார் தெரியுமா?
நடிகை போல மாற ஆசைப்பட்டு இளம்பெண் ஒருவர் 15 இடங்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (Cherri Lee) 28 இவர் அழகாக நடிகைப்போல் மாற வேண்டும் என ஆசைப்பட்டு 60 அமெரிக்க டாலர்கள் அதாவது இலங்கை மதிப்பில் 2 கோடியே 15 லட்சம் மதிப்பில் செலவு செய்து உடலில் 15 இடங்களில் அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார்.
15 அறுவை சிகிச்சை
அதிலும், அவர் நடிகையான கிம் கர்தாஷியனை போல் மாற ஆசைப்பட்டு இப்படி அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார். அதற்காக உடலின் முகம், கண்கள், மார்பு, இடுப்பு மற்றும் பின்பகுதி இடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இதுகுறித்து செர்ரி லீ தெரிவிக்கையில், “கிம் கர்தாஷியனை பார்த்து வளர்ந்தவன் நான். அவரைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என விரும்பினேன். அவர் எப்போதும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தவர். என் பார்வைக்கு உலகின் மிக அழகிய பெண்மணியாக தெரிந்தவர்.
நான் உண்மையில் முன்பு இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் முற்றிலும் வேறுபட்ட நபராக காட்சியளிக்கிறேன்.
அழகாக காட்சியளிக்கிறேன்
மேலும், மேற்கத்திய பெண்ணாக தோன்றுகிறேன். எனது கொரிய குடும்பத்தினர் பலருக்கு என்னை அடையாளம் காணக்கூட முடியவில்லை.
இதனை நான் முன்பே செய்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இவரின் இந்த மாதிரியான தோற்றத்திற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
Kim Kardashian