புற்றுநோயை குணப்படுத்த இந்த இலை போதும் - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?
புற்றுநோயையை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்கும் ஒரு இயற்கை இலை பற்றி முழு விபரம் பார்க்கலாம்.
புற்றுநோயை குணப்படுத்தும் இலை
உலகளாவிய ரீதியில் தற்போது புற்றுநோயால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களில், மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் மிகவும் பொதுவானது.
நான்காவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இது தற்போது அதிகமான பெண்களை குறிவைத்து வருகின்றது. இதற்காக பல சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, இலக்கு மருந்து சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகியவை பொதுவான சிகிச்சைகளாகும்.
ஆனால் இந்த சிகிச்சைகள் செய்தால் முடி உதிர்தல், ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தம், சோர்வு, தொற்றுகள், வாய் மற்றும் தொண்டையில் புண்கள் மற்றும் நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இதற்காக தான் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி இயற்கையில் காணப்படும் ஒரு இலை புற்றுநோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது என அறியப்பட்டுள்ளது.
Soursop இலை
சோர்சாப் என்பது அன்னோனா முரிகேட்டாவின் ஒரு பழமாகும், இது மெக்ஸிகோ, கியூபா, மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் வடக்கு தென் அமெரிக்காகொலம்பியா, பிரேசில், பெரு, ஈக்வடார் மற்றும் வெனிசுலாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரமாகும்.
இது தவிர தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. இந்த இலை புற்றுநோய் வளர்ச்சியுடன் தொடர்புடைய Free radicals சேதத்தைத் தடுக்கின்றன.
இந்த Free radicals என்பது ஒரு நிலையற்ற மூலக்கூறு. இது மற்றைய மூலக்கூறுகளுடன் எளிதில் வினைபுரிந்து, அவற்றையும் பாதிக்கும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
இதற்கு தடையாக இந்த Soursop இலை உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செடி அசிட்டோஜெனின்கள் எனப்படும் இயற்கை வேதிப்பொருட்களை உருவாக்குகிறது, அவை புற்றுநோய் செல்களைக் கொல்லக்கூடிய ஒரு பதார்த்தம்.
இந்த புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு Soursop செடி நச்சுத்தன்மையானது. இந்த இலைகளில் காணப்படும் பூஞ்சைகள் பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் இந்த பூஞ்சையை ஈஸ்ட் எதிர்ப்பு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் செல்கள் மற்றும் சாதாரண செல்கள் மீது MTT முறையைப் பயன்படுத்தி சோதித்தனர். பரிசோதிக்கப்பட்ட பல பூஞ்சைகளில், ஐந்து வலுவான புற்றுநோயை எதிர்த்துப் போராடும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |