ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோளில் கைபோட்ட தங்கை சௌந்தர்யாவின் கணவர்: ரசிகர்களின் மோசமான விமர்சனம்
சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோள் மீது கைபோட்டு எடுத்த புகைப்படத்திற்கு பலவிதமான கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து "3" படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
பின்னர் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு காரணமாக 17 வருடங்கள் கழித்து 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய "3", "வை ராஜ வை" படங்களை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து அவர் இயக்கிய "லால் சலாம்" படமும் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த் குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களின் கமெண்ட்ஸ்
இந்நிலையில், இவர்கள் வெளியிட்ட ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோள் மீது செளந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகன் கை வைத்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கண்டபடி தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"தனுஷ் அண்ணா இந்த குடும்பத்தில் இருந்திருக்க வேண்டும்" என்றும் "அது உங்க மனைவி இல்லை ஆள் மாறிடுச்சு" என்றும், "ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு, இதுல யாரு ஐஸ்வர்யா, யாரு செளந்தர்யா" என விதவிதமான கருத்துக்களை தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |