நடிகர் சூரியா இது? முன்னணி நடிகர்களை மிஞ்சிய புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சூரி.
நடிகர் சூரி
தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.
இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலிசாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.
வைரலாகும் சூரியின் புகைப்படம்
விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. மேலும் விடுதலை படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய எய்ட் பேக் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். கூடவே பைசப்ஸ் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சூரி ஏற்கனவே இதே உடலமைப்பை சீம ராஜா படத்திற்கு தயாராக்கி இருந்தார்.