கெத்தா... செம்ம ஸ்டைலா போஸ் கொடுத்த சூரி: வைரலாகும் புகைப்படம்
கெத்தா... செம்ம ஸ்டைலா... போஸ் கொடுத்த சூரியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் சூரி.
இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் மதுரையில் ஓட்டல் தொழிலையும் சூரி நடத்தி வருகிறார்.
வைரலாகும் புகைப்படம்
சமூகவலைத்தளங்களில் எப்போது நகைச்சுவை நடிகர் சூரி ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், ரொம்ப பிட்னசாக காணப்படுகிறார். என்னதான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய பிட்னஸை அவர் பராமரித்து வருகிறார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
நலமே சூழ்க! pic.twitter.com/vm3RDdPvUc
— Actor Soori (@sooriofficial) July 7, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |