5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது சூரரைப்போற்று திரைப்படம்..!
சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சூரரைப்போற்று திரைப்படம் உருவான விதம்
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் பின்னணி பாடகராக ஜி.வி.பிரகாஷ் பணியாற்றினார்.
இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமான நிறுவனத்தைத் துவக்கியவரான கோ. ரா. கோபிநாத்த்தின் கதையை படத்தின் கதையாக எடுக்கப்பட்டிருந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 12 நவம்பர் 2020 அன்று அமேசான் பிரைம் வீடியோ மூலம் படம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற இப்படம் வெற்றியை பெற்றது.
78வது கோல்டன் குளோப்பில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் பிரிவில் திரையிடப்பட்ட பத்து இந்திய படங்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் 93வது அகாடமி விருதுகளில் திரையிடப்பட்டது, ஆனால் பரிந்துரைக்கப்படவில்லை.
5 தேசிய விருதுகள் அறிவிப்பு
இந்த நிலையில் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான 68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்று அசத்தியுள்ளது.
இப்படத்தின் பின்னணி இசைக்கான விருது ஜி.வி பிராகஷிற்கும்,
சிறந்த திரைக்கதைக்கான விருது இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடித்த அபர்ணா முரளி இப்படத்திற்கான சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளது சூரரைப்போற்று திரைப்படம்