விபத்தில் சிக்கிய பிரபல பெண் இயக்குனர்! வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சி
சூரரை போற்று இயக்குனராக சுதா கொங்கரா ஹிந்தி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தினால் காயமடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரரைப்போற்று இயக்குனர்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான படம் சூரரைப்போற்று. கொரோனா காலகட்டத்தில் வெளியான இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகியது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த படத்தில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது இயக்குனர் சுதா கொங்காரா பெற்றார். மேலும் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் பெற்றனர்.
இந்நிலையில், இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படப்பின் போது இயக்குனர் சுதா கொங்கராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் வலிமிகுந்ததாக உள்ளது. ஒரு மாத காலத்திற்கு இடைவேளை எடுத்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Super painful. Super annoying! On a break for a month ? #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023