தாயின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன்! காரணம் இதுவா?
உலகில் அன்றாடம் எத்தனையோ விடயங்கள் நம்மைச் சுற்றி நடந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் இப்படியும் சிலர் இருக்கின்றனரா? என்று தோன்றுமளவுக்கு ஒரு சிலரின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
பணம்தான் அனைவரையும் ஆட்டிப் படைக்கின்றது என்று கூறுவது என்னவோ உண்மைதான். காரணம் தாயின் பென்ஷன் பணத்துக்காக அவரது உயிரற்ற உடலை 6 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்த மகனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஹெல்கா மரியா ஹெகன்பார்த் என்பவர் இத்தாலியின் வனேட்டா பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தனது 86ஆவது வயதில் இறந்துவிட்டார்.
ஹெல்காவுக்கு மாதந்தோறும் பென்ஷன் பணம் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் தாய் இறந்தது தெரிந்தால் பென்ஷன் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இறந்த தாயின் சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார் அவரது 60 வயது மகன்.
இவ்வாறு 6 வருடங்கள் கடந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் வீட்டை பரிசோதனை செய்துள்ளனர் அதிகாரிகள். அப்போது உண்மை அம்பலமானது.
ஆறு ஆண்டுகளில் ஒன்றரை கோடி ரூபாய் பென்ஷன் பணத்தை அவரது மகன் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.