குபேர மூலையில் பணம் கொட்ட வேண்டுமா? இந்த செடியை மட்டும் வீட்டில் வளர்க்காதீங்க
வீட்டில் செல்வம் செழிக்க வாஸ்து படி சில செடிகளை வளர்த்து வரும் நிலையில், இதற்கான அறிவியல் மற்றும் ஆன்மீக காரணமும் உள்ளது.
நமது வீட்டைச் சுற்றி மரம் செடிகளை வைத்தால் அது மிகப்பெரிய ஆரோக்கியம் ஆகும். ஆம் சுத்தமான காற்றாகிய ஆக்ஸிஜனை வழங்குவதுடன், மாசுபட்ட துகள்களை சில செடிகள் அளிக்கவும் செய்கின்றது.
இதனால் சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் பாதுக்காக்கப்படும் நிலையில், பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும் செடியை குறித்து தெரிந்து கொள்வோம்.
செல்வத்தை பெருக்கும் செடிகள்
மணி பிளாண்ட்
மணி பிளாண்ட் செடியானது காற்றில் உள்ள கார்பன்மோனோக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை மட்டுமே வெளியிடுகின்றது. எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வரும் கதிர்வீச்சையும் இந்த செடியானது கிரகித்து கொள்கின்றது.
அதே போன்று தென்கிழக்கு திசையில் மணி பிளாண்டை வைத்தால் கடன் தீருவதுடன், செல்வமும் வந்து சேருமாம். ஆனால் வடக்கு திசையில் மட்டும் வைக்கக்கூடாது.
மல்லிப்பூ
மல்லிப்பூ செடி பணத்தை அதிகரிக்கும் மங்களகரமான செடியாக கருதப்படும் நிலையில், வீட்டீ வாசலில் மல்லிகை செடியை வைப்பது நன்மையளிக்கும்.
ஏனெனில் நல்ல வாசனை வீசும் இடத்தில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பிக்கை உள்ள நிலையில், மல்லிக்கைப் பூ அதிர்ஷ்டத்தை கொடுப்பதுடன், நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கவும் செய்கின்றது.
தொட்டால்சிணுங்கி
தொட்டால்சிணுங்கி செடியும் வீட்டில் அதிர்ஷ்டத்தை அளிக்கின்றது. இந்த செடியை வாடாமல் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். ஏனெனில் இந்த செயால் ராகு தோஷம் நீங்கும்.
விஷ்ணு மற்றும் சிவனை நினைத்து வழிபடுபவதற்காக வளர்க்கப்படும் சங்குப்பூ செடி வளர்க்கலாம். அதிலும் நீல நிற சங்குப்பூ செடியை வளர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை அதிகரிக்கும்.
துளசி
லட்சுமி தேவிக்கு உகந்த செடியாக கருதப்படும் துளசிசெடியை வீட்டின் முற்றத்தில் வளர்க்க வேண்டும். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் இருப்பதுடன், செல்வமும் பெருகி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம்.
கருப்பு ஊமம்
சிவனுக்கு உரிய செடியாக கருதப்படும் கருப்பு அல்லது வைலட் நிற ஊமத்தை செடியை வீட்டில் வளர்க்கலாம். மேலும் துளசி செடியைப் போன்று இதனை வீட்டில் வணங்கியும் வரலாம். இதனால் பண வரவு கிடைப்பதுடன், பித்ரு தோஷங்களிலிருந்தும் விடுபடலாமாம்.
இதே போன்று பாம்பு செடியை வீட்டின் அறை அல்லது படுக்கையறையில் வைத்தால் செல்வம் பெருகும், ஆரோக்கியமாக இருக்கலாம்.
[065GXE[
தென்னை மரம்
வீட்டில் முன்னேற்றம் ஏற்பட தென்னை மரத்தையும் வளர்க்கலாம். கற்றாழை செடியையும் வீட்டில் வளர்த்து வந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
படுக்கை அறை
படுக்கையறையில் வாஸ்து சாஸ்திரபடி அதிகமான செடிகளை வளர்க்காமல், ஜாஸ்மின், லாவெண்ட்டர், மூங்கில், பீஸ் லில்லி போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.
வீட்டிற்குள் வளர்க்கக்கூடாத செடிகள்
பருத்தி செடியை எக்காரணம் கொண்டும் வீட்டில் வளர்க்க கூடாதாம். இவை துரதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் கொண்டு வருமாம். அதேபோன்று, போன்சாய், பருத்தி செடிகள், புளி, அத்திப்பழம், போன்றவையும் வீட்டில் வளர்க்கக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |