இந்த 5 பேரும் தவறுதலாக கூட வெந்தயத்தை சாப்பிடக்கூடாது: இதனால் தீங்கு என்ன?
வெந்தயத்தை உட்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படும். அதிலும் இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும். பலரும் வெந்தய விதை தண்ணீரை குடிப்பார்கள்.
இது தவிர முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வெந்தய விதைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பல நன்மைகளை வெந்தயத்தின் மூலம் நாம் பெறுகின்றோம்.
ஆனால் வெந்தயத்தை சாப்பிடுவதால் பலதீமைகளும் உண்டாகும். இதை ஒரு சில நொய் இருப்பவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தயத்தை யார் உட்கொள்ளக்கூடாது
நீரிழிவு நோயாளி | நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தய விதைகளை உட்கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்கள் மருத்துவரை அணுகாமல் இதை உட்கொள்ள கூடாது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம். |
வயிற்று பிரச்சினை | வயிற்று பிரச்சினைகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் வெந்தய விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். |
சிறுநீர் பிரச்சனை | வெந்தயம் காரமானது எனவே அவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை உட்கொள்ள வேண்டும். |
ஒவ்வாமைகள் | சில நேரங்களில் வெந்தய விதைகளை அதிகமாக உட்கொள்வதால் மக்களுக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தோலில் வெடிப்பு, அரிப்பு வீக்கம் மற்றும் சிவந்து காணப்படுதல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் வெந்தயத்தின் ஒவ்வாமை காரணமாக சிலருக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் |
கர்ப்பம் | வெந்தய விதைகளின் தன்மை காரமானது. எனவே, அதன் நுகர்வு கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதை கர்பிணிகள் சாப்பிடும் போது கரு சிதைவுக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஒருவேளை கர்ப்பிணிகள் வெந்தய நீர் குடிக்க வேண்டு என்றால் முதலில் மருத்துவரிடம் தான் ஆலோசிக்கவும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |