வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பா மாற்ற இதை விட சிறந்த வழி இல்லை - என்ன தெரியுமா?
நரை முடியை கருப்பாக்க நிரந்தர தீர் வு வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும்.
நரைமுடி கருப்பாக டிப்ஸ்
இன்றைய வேகமான வாழ்க்கையில், வெள்ளை முடி என்பது வயதின் அறிகுறியாக மட்டுமல்ல, வாழ்க்கை முறையின் அடையாளமாகவும் மாறிவிட்டது.
பலரின் தலைமுடி 25-30 வயதில் வெள்ளையாக மாறத் தொடங்குகிறது, சில சமயங்களில் மன அழுத்தம், சில சமயங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சில சமயங்களில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக தலைமுடி நரைமுடியாகும்.
இந்த நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெயும் நெல்லிக்காய் பொடியும் - இவை இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து லேசாக சூடாக்கவும். பின் வடிக்கட்டி அந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி விரைவில் கருப்பாக மாறும்.
மருதாணியும் காபித்தூள் - காபி தூளில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த கலவையுடன் மருதாணி பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இது வாரத்திற்கு மூன்று முறை செய்தால் இது வெள்ளை முடியை நிரந்தரமாக கருமையாக மாற்றும்.

வெந்தய ஹேர் பேக் - வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து அந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி பின்னர் தலைக்கு குளிக்கவும். வாரத்துக்கு ஒரு முறை இந்த ஹேர் பேக் போட்டு வந்தால் முடி வலுவாகும். வெள்ளை முடியும் கருப்பாக மாறும்.
கறிவேப்பிலையும் தயிரும் - கருவேப்பிலையுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை ஹேர் பேக்காக வாரத்திற்கு ஒரு முறை போட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும். இந்த இயற்கை வழிகளை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி இருந்த இடம் தெரியாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |