இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: எந்த ராசியினர் கவனமாக இருக்கவேண்டும் தெரியுமா?
சூரிய கிரகணமானது டிசம்பர் 4-ம் திகதி தோன்ற உள்ளது. இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக இது தோன்றுகிறது. காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 மணிக்கு முடிவடையும்.
இதனிடையே, இந்த சூரிய கிரகணமானது ஜோதிடர்களின் கணிப்பு படி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாம். இந்த சூரிய கிரகணத்தில் (Solar Eclipse 2021), சூரியன் கேதுவுடன் இணையும்.
இதைதவிர, சந்திரனும் புதனும் கூடி வருகிறார்கள். பொதுவாக, சூரியன்-கேதுவுடன் (Surya-Ketu) இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த சூரிய கிரகனத்தின் போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு விபத்துகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. மேலும், உடல் ஆரோக்கியத்திலும் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு இந்த ராசியினர்களுக்கு இந்த கிரகணம் நிவாரணம் தரும். வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
கடகம்
கடக ராசியினர்களின் மன நிலை மற்றும் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். எனவே கவனமாக இருக்க வேண்டும். கோவில்களுக்கு செல்வது நல்ல பலனை தரும்.
சிம்மம்
இந்த ராசியினர்களின் கவலைகள் நீங்கும். மேலும், நீண்ட நாட்களாக நீங்கள் சிக்கியிருந்த ஒரு பெரிய சர்ச்சையிலிருந்தும் விடுபடுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியினர்களின் தடைபட்ட பணிகள் நிறைவேறும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
துலாம்
துலா ராசியினர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்கள் எந்த ஒரு வேலையிலும் கவனமாக முடிவெடுக்க வேண்டும். அவசரமாக முடிவுகளை எடுப்பது தீங்கு விளைவிக்கும்.
தனுசு
தனுசு ராசியினர்கள் நீங்கள் சில பெரிய அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி விபத்துகளில் இருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு இந்த ராசியினர்களுக்கு இந்த கிரகணத்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த கிரகணம் பல லாபங்களை அள்ளித்தருவதற்கான வாய்ப்புகள் வலுவாக உள்ளன.
கும்பம்
கும்ப ராசியினர்கள் பெரிய வேலைகளில் வெற்றி பெறுவார்கள். இதனுடன், அன்புக்குரியவர்களால் பொருளாதார ரீதியாகவும் பயனடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசியினர்கள் திருமண வாழ்க்கை அல்லது அது தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதனுடன், எந்த முடிவை எடுக்கும்போதும் பல முறை யோசித்து இறுதி முடிவை எடுப்பது நல்லது.