பந்தக்கால் நட்டாச்சி.. குதூகலத்தில் சோபிதா- திருமணம் எப்போது தெரியுமா?
நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதிகளின் திருமணம் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.
நாக சைதன்யா - சோபிதா
தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.
இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலின் வெளிபாடாக வீட்டிலுள்ளவர்கள் சம்பதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர். அத்துடன் திருமணம் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான முதல் பல சர்ச்சையான கருத்துக்களை இணையத்தில் உலா வருகின்றன.
பந்தக்கால் நடும் புகைப்படங்கள்
இந்த நிலையில், நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதியினரின் திருமணம் எப்போது? எங்கு நடக்கப் போகின்றது? என்ற சந்தேகம் பலரிடம் இருந்து வந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சோபிதா வீட்டில் பந்தக்கால் நடும் புகைப்படங்களை சோபிதா பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திருமண தேதி குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும், நாக சைதன்யா - சோபிதா தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |