கர்ப்பமான சமந்தா.. நாகர்ஜுனா குடும்பத்துடன் களைகட்டிய வளைகாப்பு- சோபிதா இருந்தாரா?
சோபிதா துலிபாலாவின் தங்கை- சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நாக சைதன்யா - சோபிதா
தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.
இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலின் வெளிபாடாக வீட்டிலுள்ளவர்கள் சம்பதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர். அத்துடன் திருமணம் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான முதல் திருமணம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில், நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதியினரின் திருமணம் விரைவில் ராஜஸ்தானில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
வளைகாப்பு கொண்டாட்டம்
இந்த நிலையில், சோபிதா துலிபாலாவுக்கு சமந்தா என்ற தங்கை இருக்கிறார். அவர் சாஹில் குப்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் மருத்துவர்களாக டெல்லியில் பணியாற்றுகிறார்கள். தற்போது சமந்தா கர்ப்பமாக இருக்கிறார்.
அதனையொட்டி சமந்தாவிற்கு குடும்ப உறவுகள் ஒன்று கூடி வளைகாப்ப நடத்தியுள்ளனர்.
அந்த சமயத்தில், “ சோபிதா தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவிருக்கு சூழலில் அவரது தங்கைக்கு நடந்த வளைகாப்புதான் முதல் நல்ல விஷயம்..” என நாகார்ஜுனா குடும்பம் சந்தோஷமாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |