நடுவிரலை காட்டிய நாக சைதன்யாவின் புது காதலி - சமந்தா கூறிய அதிர்ச்சி பதில்!
தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் தம்பதிகளான சமந்தா நாகசைதன்யா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தை அறிவித்தனர். இவர்களின் விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய காரணமாக சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவிக்காதது தான் என தகவல்கள் பரவி வந்தன.
விவாகரத்துக்கு பின்னர் இருவரும் தங்கள் வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதில் சமந்தா தற்போது முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார்.
அடிக்கடி இணையத்தில் அவர் வெளியிடு கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், சமந்தா பிஸியாக இருந்தாலும், நாக சைதன்யா தற்போது மீண்டும் வேறு நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
நடுவிரலை காட்டிய நடிகை
அதன்படி நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவருமே அண்மையில் ஜூப்ளி ஹில்ஸி உள்ள நாக சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாக காணப்பட்டதாகவும், அங்கு இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருந்ததாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேஜர் படப்பிடிப்பின் போது இருவரும் ஓட்டலில் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதனால், இந்த வதந்தியை கிளப்பிவிட்டதே சமந்தா தான் என நாக சைதன்யாவின் ரசிகர்கள் கேள்வி கேட்ட நிலையில், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என மறுத்துள்ளார்.
இந்த நிலையில், சோபிதா துலிபாலா தன் நடுவிரலை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அவர் நாக சைதன்யாவுடன் சேர்த்து வைத்து பேசுபவர்களுக்காக அவர் நடுவிரலை காட்டியதாக நெட்டிசன்க கூறுகிறார்கள்.
ஆனால், அந்த வீடியோ எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதற்கு பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
Reyyy paid articles paid team meke ra reyyy ??#SobhitaDhulipala pic.twitter.com/vbL1riREJ2
— Chay_Cult (@SaiSanala) June 24, 2022