திருமணமாகி 4 மாதத்தில் தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் சோபிதா துலிபாலா! யாருக்கு தெரியுமா?
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள வேட்டுவம் திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகியான நடிகை சோபிதா துலிபாலா கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடிகை சோபிதா தனது காதலரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுடைய திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் நடிகை சோபிதா சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தினேஷிற்கு ஜோடியாகும் சோபிதா
பா ரஞ்சில் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்த தினேஷ் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவர் நடிப்பில் இறுதியாக லப்பர் பந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் தினேஷிற்கு ஜோடியாக, நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெகு விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |