பிக்பாஸ் சினேகன் எத்தனை ஓட்டுகள் வாங்கியிருக்கிறார் தெரியுமா?
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி திமுக 140 தொகுதிகளிலும், அதிமுக 93 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை பெற்றுள்ளார், மக்கள் நீதி மய்யம் அந்த தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இக்கட்சியின் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பிக்பாஸ் புகழ் சினேகன் போட்டியிட்டார், நண்பகல் நிலவரப்படி நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் 1,410 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இவருடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா 4,819 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.