நடிகை சினேகாவா இது? பட்டுப்புடவையில் ஜொலிக்கும் அழகைப் பாருங்க
புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு தற்போது பிரபலமாகவே இருக்கும் நடிகை சினேகா.
கவர்ச்சி காட்டாமல் தனது திறமையான நடிப்பினைக் கொண்டு, ரசிகர் பட்டாளத்தினைக் கொண்ட இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பு திறமையால் பேசப்படும் நடிகையாக மாறியதோடு, நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின்பு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மேலும் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு "பட்டாஸ்" படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார்.

தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது நேரத்தை படு ஜாலியாக செலவழித்து வரும் நடிகை சினேகா தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் பச்சைநிறப் பட்டு புடவை அணிந்து நடிகை சினேகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்று இருக்கிறது.
மேலும் தமிழ் சினிமா உலகில் நடிகை சினிமா முன்னணி இடத்தைப் பிடித்து இருந்தபோது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் இருப்பது ரசிகர்களிடம் படு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
