சாமர்த்தியமாக சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து சாண்ட்விச் திருடிய பறவை!
சீகல் பறவை ஒன்று கடைக்குள் நுழைந்து டுனா சாண்ட்விச் பாக்கெட்டை திருடி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு நிமிடம் கொண்ட அந்த வீடியோவில், கஸ் என்று அன்பாக அழைக்கப்படும் பறவை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நுழைவதைக் காணலாம்.
மேலும் தானியங்கி கதவுகளை கொண்ட அந்த கடையில் நுழைவதற்காக காத்திருந்த கஸ், கடையில் இருந்து ஒருவர் வெளியே வருவதைக் கண்ட உடன் வேகமாக உள்ளே நுழைய ஓடியது.
உள்ளே அடுக்கி வைக்கப்பட்ட சாண்ட்விச் பாக்கெட்டுகளை பார்வையிட்டு, அதில் இருந்து 2 டுனா சாண்ட்விச்களை எடுத்துக்கொண்டு சாமத்தியமாக வெளியில் வந்து விடுகின்றது. இந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.