உங்கள் கண்களை ஏமாற்றும் விசித்திர வீடியோ: பாம்பா? இல்லை பனானாவா?
சில விடயங்களை நாம் பார்க்கும் பார்வை சில வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் இருக்கும். அவை எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. அப்படியான ஒரு காட்சிதான் இணையத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
வாழைப்பழமா? பாம்பா?
வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் இரண்டு வாழைப்பழத்தை ஒரு பெட்டிக்குள் வைத்திருக்கிறார். அதில் ஒன்றை கையில் எடுத்து கேமரா முன் கொண்டு வருகிறார்.
அதுவும் சுருண்ட வடிவில் அப்படியே இருக்கிறது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது நாக்கை நீட்டுவது தெரிகிறது.
அது அச்சு அசலாக வாழைப்பழத்தை போலவே நிறம் கொண்டிருக்கும் பாம்பு என தெரியவருகிறது.
பாம்பு வகை
நாங்கள் பல்வேறு வகையிலான பாம்புகளைப் பார்த்திருப்போம். மரம், இலை, கொடி, கம்பி என பல்வேறு வகையிலான நிறத்தில் பாம்புகளைக் கண்டிருப்போம்.
இந்தப் பாம்பு மஞ்சள் நிற தோலும் ஆங்காங்கே கரும்புள்ளிகளையும் கொண்டிருக்கிறது. மேலும், அதன் அருகில் இருக்கும் வாழைப்பழத்தை போலவே இருக்கிறது.
இதனை நாங்கள் சற்று உற்றுப்பார்த்தாமல் மட்டுமே தான் அது பாம்பா? இல்லை பனானாவா? என தெரியவரும்.