ராஜநாக பாம்பை பிடிக்கும் போது நூலிழையில் உயிர் தப்பிய நபர்.. பார்வையாளர்களை அலறவிட்ட காணொளி!
கர்நாடக மாநிலத்தில் ராஜநாகத்தைப் பிடிக்கும்போது, தன்னை கடிக்க வந்த பாம்பிடம் இருந்து நூலிழையில் அந்த நபர் உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம், சிவ்மோகா என்ற இடத்தில் வனப்பகுதியில் மரத்தின் கீழ் பதுங்கியிருந்த ராஜநாகத்தை, பாம்பு பிடிப்பவர் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது அவரின் உதவியாளர் பாம்பின் வாலைப் பிடித்து தூக்கவே, சீறிய பாம்பு அந்த நபரைக் கடிக்க முயன்றது.
இதனையடுத்து, அதிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய அந்த நபரை மீண்டும் பாம்பு கடிக்க எத்தனிக்கவே, 2ம் முறையாகவும் அந்த நபர் உயிர் தப்பியுள்ளார். இக்காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பீதியடைய வைத்துள்ளது.
#WATCH | A reptile expert narrowly escapes being bitten by a Cobra snake while trying to catch the animal
— ANI (@ANI) January 12, 2021
Shivamogga, #Karnataka pic.twitter.com/czTc7Zv7pu