மரத்தில் பழங்களுக்கு பதிலாக தொங்கும் பாம்புகள்: அரியவகை தோட்டத்தை பார்வையிட ஓடும் சுற்றுலா பயணிகள்
பொதுவாகவே ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் அதில் பூ, அல்லது காய், கனிகள் தொங்குவதுதான் வழக்கம்.
ஆனால் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தோட்டத்தில் காய் கனிகளுக்கு பதிலாக வெறும் பாம்புகள் தொங்கும் காட்சிகள் இணையத்தை அதிகம் வைரலாக்கி வருகின்றது.
பாம்பு தோட்டம்
வியட்நாம் தோட்டத்தில் காய், கனிகளை வளர்ப்பது போல பாம்புகளை வளர்த்து வருகிறார்கள். இது வியட்நாமின் Trại rần Đồng Tâm இல் உள்ள ஒரு பண்ணையில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.
மற்ற தோட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுவது போல் இங்கும் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. பாம்புகளின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இதனுடன், டோங் டாம் பாம்பு பூங்கா ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகையை அதிகரித்திருக்கிறது. 12 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தோட்டத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 பேர் பாம்பு கடி சிகிச்சைக்காக இந்த தோட்டத்திற்கு வருகிறார்கள். விஷப்பாம்புகள் நிறைந்த இந்த தோட்டம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |