படம் எடுத்தவாறு தண்ணீர் குடிக்கும் பாம்பு! வைரல் காணொளி இதோ
தற்போது சமூக வலைத்தளங்களல் பாம்புகளின் காணொளிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
பாம்புகளின் காணொளி என்றால் காண்பவர்களின் எதிர்பார்ப்பினை இன்னும் அதிகரிக்கவே செய்கின்றது. காட்டு விலங்குகள் தண்ணீர் பருகும் காட்சியினை நாம் அவ்வப்போது அவதானித்திப்போம்.
ஆனால் பாம்பு தண்ணீர் பருகும் காட்சியினை அவ்வளவு எளிதாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.
சில கோவில்களில் பாம்புக்கு பால் வைத்து வழிபடுவார்கள். ஆனால் இவ்வாறு வைக்கப்படும் பாலை பாம்பு ஒருபோதும் குடிப்பதில்லை என்பது அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு படம் எடுத்தவாறு பாம்பு தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி, குளிக்கவும் செய்கின்றது. இதனை அவதானிக்கும் நெட்டிசன்கள் பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் நபர் தைரியசாலி தான் என்று கூறி வருகின்றனர்.