Viral Video: சிவபூஜையில் சிவன் பாடல் கேட்டு நடனம் ஆடிய பாம்பு: தீயாய் பரவும் வீடியோ
சிவராத்திரி விழா பல ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த சிவராத்திரியில் சிவ பூஜையின் போது கோபுர உச்சியில் நடனமாடிய பாம்பின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது.
சிவராத்திரி திருவிழா
வருடா வருடம் சிவனுக்கு என்று ஏற்ற ஒரு திருநாள் தான் சிவராத்திரி. இந்த சிவராத்திரி தினம் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த சிவராத்திரி தினத்தில் பல கோவில்களில் பல சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது. இந்த பூஜையின் அங்கு நடந்த கலைநிகழ்ச்சியில் மேள தாள மங்கள வாத்தியங்கள் கொண்ட சிவன் பாடல் ஒன்று இசைக்கப்பட்டது.
இந்த பாட்டை கேட்ட போது கோபுரத்தில் இருந்த பாம்பு உடலை காற்றில் அசைத்து ஆடும் காட்சி பலரையும் பரவச பட வைத்துள்ளது.
குறித்த சம்பவம் திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் தெரிவிக்கப்படுகிறது.
சிவனின் கழுத்தில் இருந்த பாம்பே இறங்கி வந்து ஆடியது போல் பொதுமக்கள் பாம்பின் தரிசனம் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்து அதை வணங்கி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
ஓம் நமசிவாய!!!
— Aravindh (@aravindhtk) February 22, 2023
சிவ ராத்திரி அன்று இரவு 12 மணி அளவில் கோபுரம் மேல் பாம்பு ஒன்று கோவில் நிகழ்ச்சியில் பாடும் பாட்டுக்கு நடனம் ஆடியது. திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் pic.twitter.com/rDRiF1BJrR