Amazon பொதியில் இருந்து வெளியேறிய பாம்பு..! பகீர் கிளப்பும் காட்சி
அமேசானில் ஆடர் செய்யப்பட்ட ஒரு பொருளில் இருந்து நாகபாம்பு வெளிவந்தமை தொடர்பான காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெங்களூரில் சர்ஜாபூர் சாலையில் உள்ள ஒரு குடும்பத்தினர் அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் ஒன்றை ஆடர் செய்துள்ளனர். இந்த ஆடர் டெலிவரி செய்யப்பட்ட பின்னர் அந்த பெட்டியை திறக்க முற்பட்ட போது இதில் இருந்து நாக பாம்பு வெளியேறியுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, விஷப்பாம்பு பேக்கேஜிங் டேப்பில் சிக்கியதனால் அந்த பாம்பால் வெளியேற முடியவில்லை. குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.
A family ordered an Xbox controller on Amazon and ended up getting a live cobra in Sarjapur Road. Luckily, the venomous snake was stuck to the packaging tape. India is not for beginners 💀
— Aaraynsh (@aaraynsh) June 18, 2024
pic.twitter.com/6YuI8FHOVY
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |